search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்: குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது தூத்துக்குடி
    X

    டி.என்.பி.எல்: குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது தூத்துக்குடி

    தமிழ்நாடு பீரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பீரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் லீக் ஆட்டங்களில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரை அதியசராஜ் டேவிட்சன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் கோபிநாத் ஆட்டம் இழந்தார். 4-வது ஓவரை அதிசயராஜ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தலைவன் சற்குணம் ஆட்டம் இழந்தார். முதல் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்ததால் சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணி ரன்கள் குவிக்க திணறியது.



    3-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கார்த்திக் 26 பந்தில் 33 ரன்கள் குவிக்க, அடுத்து வந்த சத்தியமூர்த்தி சரவணன் 7 ரன்னிலும், சசிதேவ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆல்ரவுண்டர் அந்தோணி தாஸ் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த வேளையில் மீண்டும் அதிசயராஜ் பந்து வீச அழைக்கப்பட்டார். 17 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் குவித்திருந்த அந்தோணி தாஸை வீழ்த்திய அதிசயராஜ், அடுத்து வந்த சதீஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழக்கச் செய்தார். நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ரன்வேட்டைக்கு ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டார்.

    இறுதியாக வந்த யோ மகேஷ் 9 ரன்னிலும், சாய் கிஷோர் 1 ரன்னிலும், அலெக்சாண்டர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சரியாக 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரிலேயே 3 சிக்சர்கள் அடித்து 22 ரன்களை குவித்தார். தொடர்ந்து சேப்பாக் அணி வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த சுந்தர் சிக்சர்களும், பவுண்டரிகளும் விளாசி அதிரடியாக ரன்களை குவித்தார்.

    ஆட்டத்தின் 13-வது ஓவரிலேயே தூத்துக்குடி அணி 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 36 பந்துகளில் 76 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது.

    இந்த போட்டியில் தோற்றாலும், சேப்பாக் அணிக்கு இன்னொரு தகுதிச்சுற்று வாய்ப்பு இருப்பதால், அந்த அணியின் சாம்பியன் கனவு இன்னும் அப்படியே உள்ளது.
    Next Story
    ×