search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக தடகள போட்டிகள்: ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்கள்
    X

    உலக தடகள போட்டிகள்: ஏமாற்றம் அளித்த இந்திய வீரர்கள்

    லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் எந்த பதக்கங்களும் வாங்காமல் ஏமாற்றம் அளித்தனர்.
    லண்டன்:

    16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 13-ந்தேதி வரை லண்டனில் நடைபெற்றது. 205 நாடுகள் பங்கேற்ற இந்த தடகள திருவிழாவில் 24 பந்தயங்கள் இடம் பெற்றன.

    1983-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளத்தில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்த முறை இந்தியா தரப்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். ஆனால் யாரும் எவ்வித பதக்கங்களையும் பெற வில்லை. ஈட்டி எறிதல் வீரர் தேவேந்தர் சிங் ஹங் மற்றும் 5000 மீ ஓட்டப் பந்தய வீரர் கோவிந்தன் லக்‌ஷ்மனன் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக விளையாடினர்.

    லக்‌ஷ்மனன் தகுதி சுற்றின் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3:35.69 நிமிடத்தில் ஓடியுள்ளார். ஈட்டி எறிதல் வீரர் தேவேந்தர் சிங் ஹங் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெயரை பெற்றார்.

    19 வயதான ஈட்டி எறிதல் வீரர் அரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா மட்டுமே கொஞ்சம் எதிர்பார்ப்பில் இருந்தார். அவர் 86.48 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அதனால் அவரின் தோல்வி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறுதி சுற்றிற்கான தகுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான 200 மீட்டரில் நிர்மலா சியோரன் அரை இறுதி சுற்று வரை சென்றார். மற்ற வீரர்கள் யாரும் நன்றாக விளையாடவில்லை. ஆண்களுக்கான மராத்தானில் டி.கோபி 28-வது இடத்தில் இருந்தார். பெண்களுக்கான மராத்தானில் மோனிகா அதாரே 64-வது இடத்தில் இருந்தார்.

    20 கி.மீ. பந்தயத்தில் கே.டி.இஃப்ரான் 23 ஆவது இடத்தில் உள்ளார். தேவேந்தர் சிங் மற்றும் கே.கணபதி 50 மற்றும் 54-வது இடங்களை கைப்பற்றியுள்ளனர். ஈட்டி எறிதலில் அனு ராணி 20-வது இடத்தைப் பிடித்தார்.
    Next Story
    ×