search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: யுவராஜ் சிங் நீக்கம் உள்பட 7 மாற்றங்கள்
    X

    இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: யுவராஜ் சிங் நீக்கம் உள்பட 7 மாற்றங்கள்

    இலங்கை அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை முடிந்த கையோடு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ரகானே, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, பும்ப்ரா, அஸ்வின், ஜடேஜா, யுவராஜ் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பிடித்திருந்தினர்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா மற்றும் பும்ப்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர், 5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.



    இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    தோள்பட்டை காயத்திற்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள லோகேஷ் ராகுலுக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. அதேபோல் ஓய்வு கொடுக்கப்பட்ட ரோகித் சர்மா, பும்ப்ரா ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.


    ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ள புதுமுக வீரர் ஷர்துல் தாகூர்

    சாஹல், அக்சார் பட்டேல், மணீஷ் பாண்டே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷர்துல் தாகூர் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. ரோகித் சர்மா (துணை கேப்டன்), 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி (கேப்டன்), 5. ரகானே, 6. மணீஷ் பாண்டே, 7. கேதர் ஜாதவ், 8. டோனி (விக்கெட் கீப்பர்), 9. ஹர்திக் பாண்டியா, 10. அக்சார் பட்டேல், 11. சாஹல், 12. குல்தீப் யாதவ், 13. பும்ப்ரா, 14. ஷர்துல் தாகூர், 15. புவனேஸ்வர் குமார்.
    Next Story
    ×