search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி போட்டியில் உசைன் போல்ட் காயம் - ரசிகர்கள் ஏமாற்றம்
    X

    கடைசி போட்டியில் உசைன் போல்ட் காயம் - ரசிகர்கள் ஏமாற்றம்

    உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார்.

    லண்டன்: 

    லண்டனில் உலக சாம்பியன்ஷிப் 2017 என்ற தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட் 4x100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டிதான் இவர் கலந்து கொள்ளும் கடைசி தடகள போட்டி என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதையடுத்து உசேன் போல்ட் பங்கேற்கும் இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. உசேன் போல்ட்டின் கடைசி போட்டி என்பதால் அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர். 

    இந்நிலையில் போட்டியின் போது 4வது மேன் ஆக ஓடிய உசேன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவரை முந்தும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியில் ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். 

    இதை கண்டதும் அரங்கமே அதிர்ச்சியில் உரைந்தது. இதையடுத்து உசேன் போல்ட்டிற்கு முதலுதவி செய்யும் குழு அவருக்கு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறினர். அவருக்கு வீல் சேர் கொண்டு வரப்பட்டது. எனினும் அவர் கால் வலியுடன் நடந்தே சென்றார்.

    இப்போட்டியில் பிரிட்டன் குழு முதல் பரிசை பெற்றது. 

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் உசேன் போல்ட் காயமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இதன் மூலம் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக்க பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.

    கடந்த 5-ம் தேதி நடைபெற்ற 100மீ ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர்கள் கட்லின் மற்றும் கிறிஸ்டியன் கோல்மேன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். உசைன் போல்ட் மூன்றாமிடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×