search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக தடகள போட்டி: நெதர்லாந்து வீராங்கனைக்கு 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
    X

    உலக தடகள போட்டி: நெதர்லாந்து வீராங்கனைக்கு 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை டெனிப்ஹிப்ஸ்ஸி தங்கம் வென்றார்.
    லண்டன்:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை டெனிப்ஹிப்ஸ்ஸி தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 22.05 வினாடியில் கடந்தார்.



    ஐவேலி கோஸ்ட் வீராங்கனை மரியாஜோஸ் வெள்ளிப்பதக்கமும் (22.07 வினாடி), பகாமசை சேர்ந்த ‌ஷப்ளே வெண்கல பதக்கமும் (22.15 வினாடி) பெற்றனர்.

    நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை ரிஸ் தங்கம் வென்றார். அவர் 7.02 மீட்டர் தூரம் தாண்டினார்.

    பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ் ஓட்டத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.



    எம்மா கோபுரன் 9 நிமிடம் 02.58 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், கோர்ட்னி பெரிகாஸ் 9 நிமிடம் 03.77 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். கென்யாவை சேர்ந்த ஜெபிக்மோய் 9 நிமிடம் 04.03 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் பாசெவ் பஜ்டெக் 79.81 மட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
    Next Story
    ×