search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கிரிக்கெட் அகாடமியில் டோனி: 20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடியில் கடந்து அசத்தல்
    X

    தேசிய கிரிக்கெட் அகாடமியில் டோனி: 20 மீட்டர் தூரத்தை 2.91 வினாடியில் கடந்து அசத்தல்

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான டோனி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ளார். அங்கு 20 மீட்டரை 2.91 வினாடியில் கடந்து அசத்தியுள்ளார்.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

    அதன்பின் இந்திய டெஸ்ட் அணி தற்போது இலங்கையில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி நாளை பல்லேகலேயில் நாளை தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்குப்பிறகு இந்தியா ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் இலங்கைக்கு எதிராக விளையாடுகிறது.

    ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளைமறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனிக்கு கட்டாயம் இடமுண்டு.



    இரு தொடர்களுக்கு இடையில் நீண்ட நாட்கள் இடைவெளி ஏற்பட்டால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபித்து காட்ட வேண்டும்.

    இதற்காக டோனி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ளார். அவருடன் கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னாவும் இங்கு வந்துள்ளனர்.

    ‘அனைத்து டெஸ்ட் நடைமுறையும் முடிந்துவிட்டது. 20 மீட்டர் ஓட்டத்தை 2.91 வினாடிகளில் கடந்தேன். மூன்று ரன்கள் ஓட வேண்டிய தூரத்தை 8.90 வினாடிகளில் கடந்தேன்’ என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள டோனி, சக வீரர்களுடன் சாப்பிடும்போது எடுத்த படத்தை வெளியிட்டு ‘‘மதிய சாப்பாட்டிற்கான நேரமிது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×