search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேகப்பந்து வீச்சாளரின் பிட்னெஸ் என்பது என்ஜினுக்கு ஆயில் போன்றது: உமேஷ் யாதவ்
    X

    வேகப்பந்து வீச்சாளரின் பிட்னெஸ் என்பது என்ஜினுக்கு ஆயில் போன்றது: உமேஷ் யாதவ்

    வேகப்பந்து வீச்சாளர்களின் பிட்னெஸ் என்பது என்ஜினுக்கு ஆயில் போன்றது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். இந்திய மண்ணில் தொடர்ந்து நடைபெற்ற சுமார் 17 போட்டிகளில் பங்கேற்று அசத்தினார். தொடர்ந்து எத்தனை ஓவர்கள் வீச வேண்டுமென்றாலும் தயாராக இருந்தார். இதனால் அவரது உடற்தகுதி குறித்து அனைவரும் பாராட்டினார்கள்.

    இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களின் பிட்னெஸ் என்பது, என்ஜினுக்கு ஆயில் போன்றது என்றது உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட்டிற்கு வருவதற்கு முன்பு டென்னிஸ் மற்றும் ரப்பர் பந்தில் விளையாடியிருக்கிறேன். அதனால், அந்த பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சிறந்த ஐடியா இருந்தது. ஆனால், பந்தை எப்படி வீச வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதில் லெதர் பால் (கிரிக்கெட் பந்து) மிகவும் கடினமாக இருந்தது. லெதர் பந்தை நான் 20 வயதில்தான் பயன்படுத்தினேன். முதல் இரண்டு மூன்று வருடங்கள் லெதர் பந்தை பயன்படுத்துவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. சில பந்துகள் தானாகவே உள்பக்கமாக ஸ்விங் ஆகும்போது, சில பந்துகள் வெளியே ஸ்விங் ஆகிறது.

    நான் பந்தை நேராக வீசும்போது சில பந்துகளை உள்பக்கம் ஸ்விங் ஆகும். சில பந்துகள் வெளியில் ஸ்விங் ஆகும். அதனால் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு குழப்பமாக இருக்கும். இதுகுறித்து அதிக அளவில் யோசிக்காதே, இது வழக்கமான விஷயம்தான் என்று என்னிடம் பயிற்சியாளர் சொன்னார். அதில் இருந்து நான் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்வதில் கவனம் செலுத்தினேன். ஆரம்பத்தில் நான் சரியாக பந்து வீசாமல் இருந்ததற்கு, 20 வயதில் கிரிக்கெட் பந்தை பயன்படுத்த தொடங்கியதுதான் காரணம்.



    ஆரம்ப கட்டத்தில் பிட்னெஸ் ஆக இருப்பது எளிது. ஏனென்றால் நான் அப்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. நான் அதிக போட்டிகளில் விளையாடும்போது, பிட்னெஸ் முக்கியத்துவம் என்பதை உணர்ந்தேன். போட்டி அட்டவணை மற்றும் பயிற்சியை வழக்கமாக மேற்கொள்வது முக்கியமானது. உடல் இயற்கையாகவே வலுவானது. ஆனால், அதற்கு வலுக்கூட்டவில்லை என்றால் ஒரு சமயத்தில் சீர்குலைந்து விடும்.

    வாய்ப்பு கிடைக்கும்போது வேகப்பந்து வீச்சாளர்கள் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது எனக்கு முக்கியத்துவம் என்பது தெரியும். என்ஜினுக்கு ஆயில் தேவை என்பது போல், எனக்கு உடற்பயிற்சி தேவை. இதை நான் செய்யவில்லை என்றால், நீண்ட தூரம் என்னால் செல்ல முடியாது’’ என்றார்.
    Next Story
    ×