search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வெகுமதி
    X

    இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வெகுமதி

    இந்திய ஆண்கள் சீனியர் மற்றும் பெண்கள் அணி தேர்வாளர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
    இந்திய தேசிய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல் இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு திறமையாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்த தேர்வுக்குழுவும் ஒரு காரணம் நம்பப்படுகிறது.

    இதனால் அவர்களுக்கு வெகுமதி வழங்கலாம் என நேற்று நடைபெற்ற பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு நேற்று டெல்லியில் கூடி இதுகுறித்து முடிவு செய்தது.



    இந்தக் கூட்டத்தில் தேர்வாளர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வெகுமதி வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகக்குழுவில் உள்ள உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்திய சீனியர் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். அவருடன் சரண்தீப் சிங் மற்றும் தேவங் காந்தி ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பதவி ஏற்றனர். கடந்த 12 மாதங்களாக இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    பெண்கள் தேர்வுக்குழுவில் ஹேமலதா கலா தலைவராக உள்ளார். லோபமுத்ரா பானர்ஜி மற்றும் ஷஷி குப்தா ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளனர்.
    Next Story
    ×