search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும்: பாகிஸ்தான்
    X

    இளையோர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும்: பாகிஸ்தான்

    பெங்களூருவில் நடைபெற இருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என் பாகிஸ்தான் விரும்புகிறது.
    இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே எந்தவொரு விளையாட்டிலும் நேரடி தொடர் நடத்தப்படவில்லை. குறிப்பாக கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலகோடி ரூபாய் இந்தியாவிடம் நஷ்டஈடாக கேட்டு வருகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் வரும் நவம்பர் மாதம் 19 வயதிற்குபட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய சீனியர் அணி தங்களுக்கு எதிராக விளையாட மறுக்கும் வேளையில், இந்த தொடரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வலியுறுத்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க இருக்கும் நஜம் சேதி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவரான ஷகாரியார் கான் இருந்து வருகிறார். வரும் 12-ந்தேதி கொழும்பில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் இதுகுறித்து பேசுவோம். இந்தியா, பாகிஸ்தானுக்கு நடுநிலையான பாதுகாப்பான இடத்தில் இந்த தொடரை நடத்த வேண்டும்’’ என்றார்.

    ஷகாரியார் கான் தலைவராக உள்ளதால் இந்த முடிவில் பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
    Next Story
    ×