search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: குஜராத் - அரியானா இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்: குஜராத் - அரியானா இன்று மோதல்

    புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    நாக்பூர்:

    புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பல்தான், யூ மும்பா தலா 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. குஜராத் அணி 8 புள்ளியுடனும், டெல்லி 7 புள்ளியுடனும், அரியானா 4 புள்ளியுடனும், ஜெய்ப்பூர் 1 புள்ளியுடனும் உள்ளன.

    ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பிரேட்ஸ் 15 புள்ளியுடன் முதலிடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி 11 புள்ளியுடனும், பெங்கால் வாரியர்ஸ், உ.பி. யோதா தலா 10 புள்ளிகளுடனும், தெலுங்கு டைட்டன்ஸ் 8 புள்ளியுடனும், தமிழ் தலைவாஸ் 2 புள்ளியுடனும் உள்ளன.
    Next Story
    ×