search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.வி. சிந்து போட்டிக்குப் பிறகு பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு
    X

    பி.வி. சிந்து போட்டிக்குப் பிறகு பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு

    ரியோ ஒலிம்பிக்கில் பி.வி. சிந்து பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் விளையாடிய ஆட்டத்திற்குப் பிறகு தற்போது பெண்கள் உலகக்கோப்பையை டி.வி.யில் அதிக மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
    இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இதையும் மீறி சில போட்டிகளை அதிக அளவில் டி.வி.யில் பார்த்த ரசித்த சம்பவங்களும் உண்டு.

    கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சிந்து ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியில் சிந்து வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு ஒரு தங்கம் கிடைக்கும் என்பதாலும், தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெயர் சிந்துவிற்கு கிடைக்கும் என்பதால் இப்போட்டிக்கு இந்திய ரசிர்கள் இடையே ஆர்வம் அதிகரித்தது.

    இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரசிகர்கள் டி.வி. முன் அமர்ந்து ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். இந்த போட்டியில் சிந்து துரதிருஷ்டவசமாக தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். இந்த போட்டியை இந்தியாவில் சுமார் 17.3 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்தனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இந்திய வீராங்கனை ஒருவர் மோதும் போட்டியை அதிக அளவில் பார்த்தது இதுதான் முதன்முறை.



    இதேபோன்று சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அமைந்தது. இதில் இந்தியா - இங்கிலாந்து வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை காணவும் மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இறுதிப் போட்டியில் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருந்தாலும் இந்த போட்டியை 19.53 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×