search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 10 டைட்டிலை வென்று மோ பரா சாதனை
    X

    10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 10 டைட்டிலை வென்று மோ பரா சாதனை

    லண்டன் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றதன் மூலம் இங்கிலாந்து வீரர் மோ பரா 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 10 டைட்டில்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
    இங்கிலாந்து நாட்டின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் மோ பரா. 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின், 34 வயதாகும் மோ பரா இதுவரை முக்கிய தொடர்களில் தோல்வியடைந்தது கிடையாது.

    2012 ஒலிம்பிக்கில் இருந்து 9 தங்கத்தை வென்ற மோ பரா, 10-வது தங்கத்தை வெல்வதற்காக லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டார். இதுதான் இவரது கடைசி உலக தடகள சாம்பியன்ஷிப் தொடராகும்.



    இதனால் வெற்றியோடு முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக ஓடினார். இரண்டுமுறை தடுமாறி கீழே விழ முயன்றார், என்றாலும் சிறப்பாக ஓட்டத்தை முடித்து 10-வது தங்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். உகாண்டா வீரர் வெள்ளியும், கென்ய வீரர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
    Next Story
    ×