search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்டி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி யூகி பாம்ப்ரி அசத்தல்
    X

    சிட்டி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி யூகி பாம்ப்ரி அசத்தல்

    வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் 6-ம் நிலை வீரரான காயல் மோன்பில்ஸ்-ஐ வீழ்த்தி யூகி பாம்ப்ரி அசத்தியுள்ளார்.
    அமெரிக்காவின் வாஷிங்டனில் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 200-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 22-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் காயல் மோன்பில்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த தொடரின் நடப்பு சாம்பியனும், 6-ம் தரநிலை வீரருமான காயல் மோன்பில்ஸ்க்கு எதிராக தொடக்கம் முதலே பாம்ப்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.



    ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார். என்றாலும் சுதாரித்துக்கொண்ட யூகி பாம்ப்ரி 3-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றி காயல் மோன்பில்ஸ்-க்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    Next Story
    ×