search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன்: மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு
    X

    சின்சினாட்டி ஓபன்: மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு

    ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவிற்கு சின்சினியாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் விளையாட வைல்டு கார்டு கிடைத்துள்ளது.
    ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவரு்ககு 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது.

    இந்த தடைக்காலம் முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் டென்னிஸ் அரங்கத்திற்கு மீண்டும் திரும்பினார். முதன்முறையாக ஸ்டட்கார்ட் ஓபன், அதையடுத்து மாட்ரிட் மற்றும் ரோம் ஓபனில் விளையாட வைல்டு கார்டு பெற்றார். அப்போது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில தொடர்களில் பங்கேற்காமல் இருந்தார்.



    தற்போது காயம் குணமடைந்ததால் டென்னிஸ் விளையாட தயாராகியுள்ளார். அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் சின்சினியாட்டி ஓபன் தொடரில் பங்கேற்க மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மரியா ஷரபோவா 2011-ம் ஆண்டு சின்சினாட்டி ஓபனை கைப்பற்றியுள்ளார். தடைக்காலம் முடிந்து டென்னிஸ் தொடருக்கு வரும்போது தரவரிசை பெறாத ஷரபோவா, தற்போது 173-வது இடத்தில் உள்ளார்.

    இரண்டுமுறை சின்சினியாட்டி ஓபனை வென்ற அசசென்கா குழந்தை பெற்றதால் சிறிது காலம் விளையாடாமல் இருந்தார். அவருக்கும் வைல்டு கார்டு கிடைத்துள்ளது.
    Next Story
    ×