search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெல்ஜியம், நெதர்லாந்து தொடர்: இந்திய அணியில் 6 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு
    X

    பெல்ஜியம், நெதர்லாந்து தொடர்: இந்திய அணியில் 6 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

    பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் 6 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
    இந்திய ஹாக்கி அணி ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 6 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்லென்சானா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலக லீக் அரையிறுதி தொடரை முன்னிட்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 6 பேரில் கோல் கீப்பரான சுராஜ் கார்கேராவும் ஒருவர். இவர் காயம் காரணமாக சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய வருண் குமார், டிப்சன் டிர்கே, நீலகண்ட ஷர்மா, குர்ஜண்ட் சிங், அர்மான் குரேஷி ஆகியோரும் புதுமுக வீரர்களாவார்கள்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்:- ஆகாஷ் அனில் சிக்தே, சுராஜ் கார்கேரா

    பின்கள வீரர்கள்:- டிப்சன் டிர்கே, கோதாஜித் சிங், குரிந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், வருண் குமார்,

    நடுக்கள வீரர்:- எஸ்.கே. உத்தப்பா, ஹர்ஜீத் சிங், மன்ப்ரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சானா சிங் (துணை கேப்டன்), சுமித் நீலகண்ட ஷர்மா.

    முன்கள வீரர்கள்:- மன்தீப் சிங், ராமன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், குரஜன்ட் சிங், அர்மான் குரேஷி.

    ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஆகஸ்ட் 9-ந்தேதி பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×