search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்மிண்டன் தரவரிசை: பிரணாய் 17-வது இடத்திற்கு முன்னேற்றம்
    X

    பேட்மிண்டன் தரவரிசை: பிரணாய் 17-வது இடத்திற்கு முன்னேற்றம்

    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் எச்.எஸ். பிரணாய் தரவரிசையில் 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். காஷ்யப் 47-வது இடத்தில் உள்ளார்.
    இந்திய பேட்மிண்டன் வீரர்களான எச்.எஸ். பிரணாய், காஷ்யப், சமீர் வர்மா ஆகியோர் அமெரிக்க ஓபனில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு தொடரில் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதனால் 6 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    அமெரிக்க ஓபனில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய காஷ்யப் 12 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் அடிக்கடி காயத்தால் பல தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.



    சமீர் வர்மா நான்கு இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிப் பெற்ற நான்காவது வீரராவார்.

    இந்தோனேசியா, ஆஸ்திரேலிய ஓபனை அடுத்தடுத்து வென்ற ஸ்ரீகாந்த் கிதாம்பி 8-வது இடத்தில் உள்ளார். அஜய் ஜெயராம் 16-வது இடத்திலும், பி. சாய் பிரணீத் 19-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் தரவரிசையில் பிவி சிந்து 5-வது இடத்திலேயே நீடிக்கிறார். சாய்னா நேவால் 16-வது இடத்தில் உள்ளார். கலப்பு இரட்டையரில் பிரணாவ் ஜெரி சோப்ரா - என். சிக்கி ரெட்டி ஜோடி 20-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
    Next Story
    ×