search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1998-ல் ஆஸி.க்கு எதிராக 143, 134 ரன்கள் அடிக்கும்போது ஏற்பட்ட கஷ்டத்தை நினைவு கூறிய சச்சின்
    X

    1998-ல் ஆஸி.க்கு எதிராக 143, 134 ரன்கள் அடிக்கும்போது ஏற்பட்ட கஷ்டத்தை நினைவு கூறிய சச்சின்

    ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 143 ரன்களும், 134 ரன்களும் விளாசியபோது ஏற்பட்ட கஷ்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் நினைவு கூர்ந்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். ஷார்ஜா கிரிக்கெட் போட்டி என்றாலே சச்சின் விளாசிய 143 ரன்களும், 134 ரன்களும்தான் நினைவுக்கு வரும்.

    1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கோககோலா கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 22-ந்தேதி இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன், குறிப்பிட்ட ஓவருக்குள் அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது.

    ஆஸ்திரேலியா அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் காஸ்ப்ரோவிச், ஸ்டீவ் வாக், பிளெமிங் மற்றும் வார்னே போன்றோர் இருந்தனர். இவர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்து சச்சின் தெண்டுல்கர் 143 ரன்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 24-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் 134 ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    ஷார்ஜாவில் ஏப்ரல் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பத்தின் தாக்கம் ஷூ சாக்ஸ் வழியாக உள்ளே நுழைவதை உங்களால் உணர முடியும். எப்போது ஷூவை கழற்றிவிட்டு ஐஸ் பக்கெட்டில் கலை நுழைக்கலாம் என்பதுதான் உங்களுடைய முதல் விஷயமாக இருக்கும்.

    நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஷார்ஜாவில் ஏற்பட்ட ஒரு கடினமாக சூழ்நிலையை நினைவு கூற விரும்புகிறேன். அந்தச் சூழ்நிலையில் நம்பர் ஒன் அணிக்கெதிராக வெற்றி பெற்றோம். அந்த வெற்றி ஏற்றுக் கொள்ளும் வகையில் மிகவும் திருப்திகரமாக இருந்தது.



    ஷார்ஜா தொடரில் தன்னுடயை 48 மணி நேர அனுபவம் 1998-ல் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் நாங்கள் ஷார்ஜாவில் விளையாடினோம். அப்படி விளையாடிய பின்னர் துபாய்க்கு பயணம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றோம்.

    என்னுடைய கிட் பேக் எல்லாவற்றையும் கழற்றி வைத்து சகஜ நிலைக்கு திரும்ப நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது. அப்போதுதான் நான் தூங்கச்சென்றேன். அடுத்த நாள் எங்களை தயார்படுத்தி அடுத்த நாள் இறுதிப் போட்டிக்குச் சென்றோம். இது மிகவும் எளிதானது அல்ல’’ என்றார்.

    அடுத்த மாதம் 20-ந்தேதி அரை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கர் மேற்கொண்ட கருத்தைக் கூறினார்.
    Next Story
    ×