search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேத்யூ ஹெய்டனை அதிவேக பந்தால் கொடூரமாக தாக்க விரும்பினேன்: அக்தர்
    X

    மேத்யூ ஹெய்டனை அதிவேக பந்தால் கொடூரமாக தாக்க விரும்பினேன்: அக்தர்

    நான் சர்வதேச போட்டியில் விளையாடிய காலத்தில் மேத்யூ ஹெய்டனை அதிவேக பந்து வீச்சால் கொடூரமாக தாக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சோயிப் அக்தர். தன்னுடைய உடல் கட்டமைப்பு, ஓடிவரும் விதம் மற்றும் பந்தின் வேகம் ஆகியவற்றால் பேட்ஸ்மேன்களை கலங்க வைத்தவர். 150 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய அக்தர் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் அஞ்சினார்கள்.

    இவர் விளையாடிய காலத்தில் 19 பேரை காயத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனை கொடூரமாக தாக்க விரும்பியதாகவும் நினைவு கூர்ந்தார்.



    சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவராகவே மீம்ஸ் செய்து செய்துள்ளார். அதில் அக்தர் ‘‘அதிகமான பேட்ஸ்மேன்கள் என்னுடைய பந்து வீச்சில் அடிபட்டு ரிட்டையர்டு கர்ட் மூலம் வெளியேறி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் அதிகமாக இருக்கும். ஒருவரைத் தவிர மற்றவர்களை இப்படி காயப்படுத்தியதை விரும்பவில்லை. அவர் யார்? என்று யூகிங்கள்’’ என்று கடந்த 25-ந்தேதி டுவிட் செய்திருந்தார்.

    பின்னர் 25-ந்தேதி ‘‘அது மேத்யூ ஹெய்டன். நான் விளையாடிய காலத்தில் அவரை கொடூரமாக தாக்க விரும்பினேன். டெஸ்ட் மற்றும் பயிற்சி போட்டிகளில் பலமுறை தாக்கியுள்ளேன். தற்போது அவர் என்னுடைய சிறந்த நண்பராக உள்ளார். அவர் நம்பர் ஒன் பெருந்தன்மை படைத்த வீரர். ஹெய்டனை போன்ற சிறந்த மனிதரை நான் பார்த்ததில்லை.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×