search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறுமை இழக்கமாட்டேன்: டெஸ்டில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா சொல்கிறார்
    X

    பொறுமை இழக்கமாட்டேன்: டெஸ்டில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா சொல்கிறார்

    காலே டெஸ்டில் அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்டியா, தேவையில்லாமல் பொறுமை இழக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணி சார்பில் அறிமுகமாகியுள்ளார்.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 600 ரன்கள் குவித்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்து மொத்தமாக 600 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 8-வது வீரராக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.

    இன்று காலை ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா அளித்துள்ள பேட்டியில் ‘‘டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும்போது எப்போதுமே சிறந்த உணர்வாகத்தான் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.



    இறுதியாக காலே டெஸ்ட் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தருணம் எனக்கு பெருமையாக இருக்கிறது. தேவையில்லாம் நான் பொறுமையிழப்பது கிடையாது. இது ஒரு சிறந்த விஷயம். பொறுமை இழக்கக்கூடிய நிலையை பற்றி தெரிந்துக் கொண்டபோது, அமைதியாக இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

    நானும் எனது சகோதரருமான குருணால் பாண்டியாவும் அடிக்கடி தகவல்களை பரிமாற்றிக் கொள்வோம். தங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு நாளும் பேசிக் கொள்வோம்.

    ஒரு பந்து வீச்சராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். கடினமாக பயிற்சி எடுக்க வேண்டும். பவுலராக இருந்தாலும், பேட்ஸ்மேனாக இருந்தாலும் என்னுடைய பணியைச் செய்வேன். பந்து வீச்சாளர் என்றால், என்னுடைய பணி விக்கெட் வீழ்த்துவதுதான்’’ என்றார்.
    Next Story
    ×