search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் இந்திய ஆணழகன் போட்டி: தமிழக வீரர் மோகன் சுப்பிரமணியம் சாம்பியன்
    X

    தென் இந்திய ஆணழகன் போட்டி: தமிழக வீரர் மோகன் சுப்பிரமணியம் சாம்பியன்

    தமிழ்நாடு பாடி பில்டர்ஸ் வெல்பர் சொசைட்டி சார்பில் தென் இந்திய ஆணழகன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் தமிழக வீரர் மோகன் சுப்பிரமணியம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    சென்னை, ஜூலை. 26-

    தமிழ்நாடு பாடி பில்டர்ஸ் வெல்பர் சொசைட்டி சார்பில் தென் இந்திய ஆணழகன் போட்டி சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களில் இருந்து 140 பேர் பங்கேற்றனர்.

    இதில் தமிழக வீரர் எஸ்.மோகன் சுப்பிரமணியம் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வென் றார். 55 கிலோ பிரிவில் பாலாஜி, ஜெய்சங்கர், ராம் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    மற்ற பிரிவுகளில் கே.வெங்க டேஷ், ராஜீவ், முகேஷ் (60 கிலோ), பிரவீண், மதன்குமார், சாமுவேல் ஸ்டீபன்ராஜ் (65), சரத், நவீன், திலீபன் (70), அங்கீஷ் பிரசாந்த், தண்டபாணி, எம்.வெங்கடேசன் (75), ஜெயபிரகாஷ், கமலேஷ், தயாளன் (80 கிலோ), மோகன் சுப்பிரமணியம், மிலின் சதீஷ், பிராங்ளின் (85), ஜெயகாந்தன், வெற்றிவேலு, சசிகுமார் (90), எஸ்.பிரசாந்த், விக்னேஷ்.(90 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) பிசிக் பிரிவில் கலைச்செல்வன், மணிகண்டன், ராஜன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் பிடித்தனர். இந்தப் போட்டியில் தமிழக வீரர்களேஆதிக்கம் செலுத்தினர்.

    பரிசளிப்பு விழாவில் எம்.எல்.ஏ. விருகை ரவி, எம்.பி.க் கள் எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெய வர்த்தன், இந்திய ஆணழகன் சம்மேளன செயலாளர் சேத்தன் பதாரே, அர்ஜூனா விருது பெற்ற சுதர்மன், போட்டி அமைப்பா ளர் ஜே.முனியப்பன், நாகேஷ் பிரசாத் (முன்னாள் இந்திய ஆணழகன்), தமிழ்நாடு டென்பின் சங்க பொரு ளாளரும், ஜி.எம்.பி. ஹவுசிங் நிறுவன நிர்வாக இயக்குனருமான ஏ.ரபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×