search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் சாதனை துளிகள்
    X

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியின் சாதனை துளிகள்

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்த இரு அணிகளின் சாதனை புள்ளி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
    இந்தியாவும், இலங்கையும் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. 15 டெஸ்ட் டிரா ஆனது. இவ்விரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து சில சாதனை புள்ளிகள் விவரம் வருமாறு:-

    அணி அதிகபட்சம்: இலங்கை-952/6 டிக்ளேர் (கொழும்பு, 1997), இந்தியா-726/9 டிக்ளேர் (மும்பை, 2009)

    அணி குறைந்த பட்சம்: இலங்கை-82 ரன் (சண்டிகார், 1990), இந்தியா-112 ரன் (காலே, 2015)

    அதிக ரன்கள் குவித்தவர்: சச்சின் தெண்டுல்கர் (இந்தியா)- 1,995 ரன் (25 டெஸ்ட்), ஜெயவர்த்தனே (இலங்கை)- 1,822 ரன் (18)

    தனிநபர் அதிகபட்சம்: ஜெயசூர்யா (இலங்கை)- 340 ரன் (கொழும்பு, 1997), ஷேவாக் (இந்தியா)- 293 ரன் (மும்பை, 2009)

    அதிக சதங்கள்: தெண்டுல்கர் (இந்தியா)-9, ஜெயவர்த்தனே (இலங்கை)-6

    அதிக விக்கெட் வீழ்த்தியவர்: முரளிதரன் (இலங்கை)- 105 விக்கெட் (22), கும்பிளே (இந்தியா)- 74 விக்கெட் (18)
    Next Story
    ×