search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்மர் பார்சிலோனா அணிக்காகத்தான் விளையாடுவார்: ஜெரார்டு பிக்காய் சொல்கிறார்
    X

    நெய்மர் பார்சிலோனா அணிக்காகத்தான் விளையாடுவார்: ஜெரார்டு பிக்காய் சொல்கிறார்

    நெய்மர் பார்சிலோனா அணிக்காகத்தான் விளையாடுவார் என்று அந்த அணியின் முன்னணி வீரர் ஜெரார்டு பிக்காய் கூறியுள்ளார்.
    பார்சிலோனா அணியின் முன்னணி வீரராக பிரேசில் நாட்டின் நெய்மர் இருந்து வருகிறார். இவருடன் மெஸ்சி, சுவாரஸ் ஆகியோர் அணிக்கு வெற்றிமேல் வெற்றியை குவித்து வருகிறார்கள்.

    தற்போது அணிகளுக்கு இடையிலான வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெற்று வருகிறது. பார்சிலோனாவில் விளையாடும் நெய்மரை பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வாங்குவதற்கு விரும்புகிறது.

    நெய்மருக்கு அதிக சம்பளம் கொடுக்கவும் பி.எஸ்.ஜி. அணி தயாராக உள்ளது. இதனால் நெய்மர் பி.எஸ்.ஜி. அணிக்குச் செல்லலாம் என்ற வதந்தி உலவி வருகிறது.

    கடந்த வருடமும் இதுபோன்று வதந்தி உலவிய போது பார்சிலோனா நெய்மர் உடன் புதிய ஓப்பந்தம் செய்தது. அதன்படி 2021 வரை பார்சிலோனா அணிக்காக விளையாட நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.



    தற்போது நெய்மர் பார்சிலோனா தலைவர் ஜோசப் மரியா போர்டோமெயு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது புதிய ஒப்பந்தத்திற்கான உத்தரவு ஏதும் போடப்படவில்லை. இதை நெய்மர் பயன்படுத்தி அடுத்த அணிக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றால் நெய்மருக்கு அதிக அளவு சம்பளம் கிடைக்கும். அத்துடன் அதிக விலைக்கு டிரான்ஸ்பர் ஆகும் வீரர் என்ற பெயரை பெறுவார்.

    இந்நிலையில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் ஜெரார்டு பிக்காய், நெய்மர் பார்சிலோனா அணிக்காகத்தான் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×