search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் இன்னும் பதற்றத்துடன்தான் உள்ளேன்: லோகேஷ் ராகுல் சொல்கிறார்
    X

    நான் இன்னும் பதற்றத்துடன்தான் உள்ளேன்: லோகேஷ் ராகுல் சொல்கிறார்

    நான் இன்னும் பதற்றத்தில்தான் உள்ளேன் என்று தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள லோகேஷ் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
    இந்திய அணியின் வளர்ந்து வரும் வீரராக லோகேஷ் ராகுல் உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெற்றபோது, முதல் டெஸ்டின் விளையாடிய லோகேஷ் ராகுலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    காயத்துடனே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடினார். காயத்துடன் விளையாடினாலும் 7 இன்னிங்சில் 6-ல் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த தொடருக்குப்பின் லண்டன் சென்று தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் டிராபி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகியிருந்தார்.

    தற்போது காயம் குணமடைந்துள்ளதால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் 58 பந்தில் 54 ரன்கள் எடுத்து அசத்தினார்.



    இருந்தாலும் காயம் குறித்த பதற்றம் இருக்கிறது. என்னுடைய உடல் இன்னும் முழுவதுமாக உறுதியாகவில்லை என்று லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

    இதுகுறுதித்து லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘தற்போது வரை நான் பதற்றமாகவே இருக்கிறேன். எனது உடல் இன்னும் உறுதியாகவில்லை. இது என்னை முன்னேறுவதில் இருந்து தடுத்து வருகிறது. இதுதான் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    உடற்தகுதியில் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். உங்களால் கடினமாக பயிற்சி செய்ய முடியும். வலுவாக இருப்பதாவும், உடல்நிலை பிட்டாக இருப்பதாகவும் உணர முடியும்.

    ஆனால் மீண்டும் இதுபோன்று நடந்தால், மூன்று மாதங்கள் காயத்தில் அணியில் இடம்பெற முடியாமல் போனால், தோள்பட்டை சரியாகவில்லை என்றால், உடனடியாக அணிக்கு திரும்ப முடியுமா? என்று மனது எப்போதும் உங்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கும்.

    ஏராளமான கோள்விகள் மற்றும் ஏராளமான சந்தேகங்கள் எழும்பும். இதை எதிர்கொள்வது எனக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு நாட்களையும் சந்தோசமாக கழித்து வருகிறேன். மீண்டும் இதுபோன்ற நடக்கும் என்றால், அது நடக்கும். இது என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லை. எல்லாவற்றையும் எதிர்கொண்டு என்னால் மீண்டு வர இயலும். என்னுடைய தோள்பட்டை வலுவாகவும், என்னுடைய உடல்நிலை வலுவாகவும் முயற்சி செய்து வருகிறேன். ஹெல்மெட்டை மாட்டிவிட்டேன் என்றால், இதுபோன்ற விஷயங்களை மறந்து விடுவேன்.



    பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகிறதை பார்த்தால், கட்டாயம் டிரைவ் ஆடுவேன். 15 வருடங்களாக எனது உடல் இப்படிதான் செயல்பட்டு வருகிறது. காயம் இருந்தாலும், காயம் இல்லாவிடிலும் உடல் வேலை செய்யும். இந்த பயம் உண்மையிலேயே இருக்கிறது. இதை எதிர்கொண்டு நிச்சயமாக அதில் இருந்து வெளி வருவேன்’’ என்றார்.
    Next Story
    ×