search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்சியாவிடம் இருந்து கர்ட் ஸோமாவை கடனுக்கு பெற்றது ஸ்டோக் சிட்டி
    X

    செல்சியாவிடம் இருந்து கர்ட் ஸோமாவை கடனுக்கு பெற்றது ஸ்டோக் சிட்டி

    இங்கிலீ்ஷ் பிரிமீயர் லீக் சாம்பியனான செல்சியாவிடம் இருந்து கர்ட் ஸோமாவை கடனுக்கு வாங்கியுள்ளது ஸ்டோக் சிட்டி.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் முன்னணி அணியாக திகழ்வது செல்சியா. 2016-17 சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த அணிக்காக 71 போட்டிகளில் விளையாடிவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்ட் ஸோமா. இவரை ஸ்டோக் சிட்டி கடனுக்கு பெற்றுள்ளது.

    ‘‘கர்ட் ஸோமா மிகச்சிறந்த இளம் பின்கள வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் வருகையால் வரும் தொடரில் எங்கள் அணி மேலும் வலுப்பெறும்’’ என்று ஸ்டோக் சிட்டி மானேஜர் கூறியுள்ளார்.



    22 வயதாகும் கர்ட் ஸோமா பிரான்ஸ் தேசிய அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 முதல் 2014 வரை செயின்ட் எடியென்னே அணிக்காவும், 2014 முதல் தற்போது வரை செல்சியாக அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2014 முதல் 2017 வரையிலான காலத்தின்போது செயின்ட் எடியென்னே அணிக்காக கடன் அடிப்படையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×