search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிசீசன் கால்பந்து போட்டி: பேயர்ன் முனிச்சை 4-0 என வீழ்த்தியது ஏசி மிலன்
    X

    பிரிசீசன் கால்பந்து போட்டி: பேயர்ன் முனிச்சை 4-0 என வீழ்த்தியது ஏசி மிலன்

    சீனாவில் நடைபெற்ற பிரிசீசன் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் அணியை 4-0 என வீழ்த்தியது ஏசி மிலன்.
    கால்பந்து கிளப் அணிகளுக்கான முன்னணி சீசன் இன்னும் தொடங்கவில்லை. இந்த தொடருக்கு முன் பிரிசீசன் என்ற வகையில் வெளிநாடுகளில் சில போட்டிகளில் கிளப் அணிகள் மோதி வருகின்றன. அதன்படி சீனாவின் ஷென்சென்னில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஏசி மிலன் - பேயர்ன் முனிச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    13-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்த ஏசி மிலன், 24-வது நிமிடத்திலும், 43-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க முதல் பாதி நேரத்தில் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்த ஏசி மிலன், 4-0 என பேயர் முனிச்சை தோற்கடித்தது.

    இந்த போட்டியை 40 ஆயிரம் ரசிகர்கள் நேரில் வந்து பார்த்து ரசித்தனர். சீனா தற்போது கால்பந்து போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×