search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம் டிரா: கோலி, ரகானே, தவான், சஹா சிறப்பான ஆட்டம்
    X

    பயிற்சி ஆட்டம் டிரா: கோலி, ரகானே, தவான், சஹா சிறப்பான ஆட்டம்

    இலங்கை கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா, தவான், சஹா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணி 187 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா 74 ரன்னும், கேப்டன் திரிமன்னே 59 ரன்னும் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுக்களும், ஜடேஜா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அபிநவ் முகுந்த் (0), புஜாரா (12) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். லோகேஷ் ராகுல் 54 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி 53 ரன்கள் எடுத்த நிலையிலும், ரகானே 40 ரன்களும், ரோகித் சர்மா 38, தவான் 41 ரன்கள் எடுத்த நிலையிலும் ரிட்டையர்டு மூலம் வெளியேறினார்கள்.



    அடுத்து வந்த சஹா சிறப்பாக விளையாட, ஹர்திக் பாண்டியா 11 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும் வெளியேற இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சஹா 36 ரன்னுடன் களத்தில் இருந்தார்.



    இந்தியா டிக்ளேர் செய்ததும் அத்துடன் போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் ஒப்புக் கொண்டனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
    Next Story
    ×