search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அபய் சிங் போராடி தோல்வி
    X

    உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அபய் சிங் போராடி தோல்வி

    உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் போராடி தோல்வியடைந்தார்.
    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் நியூசிலாந்தின் தவுரங்கா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீர்ர் அபய் சிங், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதி வரை முன்னேறினார். இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இவர், எகிப்து வீரர் மர்வான் டாரெக்குடன் மோதினார்.

    இப்போட்டியின் துவக்கத்தில் கடுமையாகப் போராடிய அபய் சிங், முதல் செட்டை 11-8 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதன்பின்னர், எழுச்சி பெற்ற எகிப்து வீரர் அடுத்த மூன்று செட்களையும் 11-4, 11-6, 11-6 என கைப்பற்றி வெற்றி பெற்றார். அபய் சிங் தோல்வி அடைந்ததால் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

    முன்னதாக மூன்றாம் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் யாஷ் பட்தேவை டாரெக் வீழ்த்தியிருந்தார். காலிறுதியில் தோல்வி அடைந்த அபய் சிங், இனி 5 முதல் 8-ம் இடங்களுக்கான போட்டியில் மோத உள்ளார்.

    சிறுமிகள் பிரிவில், அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கிறது. அதேபோல் இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தின் சிறுவர்கள் அணி பங்கேற்கும் டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது. 
    Next Story
    ×