search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானில் ‘ரோபோ’க்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி
    X

    ஜப்பானில் ‘ரோபோ’க்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி

    ரோபோக்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.
    சிட்னி:

    எந்திர மனிதன் எனப்படும் ‘ரோபோ’ அனைத்து துறைகளிலும் சாகசம் புரிந்து வருகிறது. மேலைநாடுகளில் மருத்துவம் மற்றும் உணவகங்களில் அவை பணி புரிந்து வருகின்றன.

    தற்போது விளையாட்டு துறையிலும் ‘ரோபோ’க்கள் சாதனை படைத்துள்ளன. கால்பந்து விளையாடும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது.

    அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன. இது 20-வது ஆண்டாக நடைபெறும் போட்டியாகும்.

    தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகள் தலா 5 தடவை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. தற்போது 6-வது தடவையாக பட்டம் வெல்ல 2 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய ‘ரோபோ’ அணி நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
    Next Story
    ×