search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையினால் இலங்கை தொடருக்கான பயிற்சியில் தடை ஏற்பட்டது: சஹா சொல்கிறார்
    X

    தொடர் மழையினால் இலங்கை தொடருக்கான பயிற்சியில் தடை ஏற்பட்டது: சஹா சொல்கிறார்

    கொல்கத்தாவில் தொடர் மழை பெய்து வந்ததால், இலங்கை டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் தடை ஏற்பட்டது என்று சஹா கூறியுள்ளார்.
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சஹா இடம்பிடித்துள்ளார்.

    இவர் கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தரம்சாலாவில் விளையாடிய போட்டியின்போது இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இலங்கை தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ளார்.

    கொல்கத்தாவில் இருக்கும்போது என்னுடைய பயிற்சியை தொடர்மழை கெடுத்துவிட்டதாகவும், ஒன்றிரண்டு கிளப் போட்டிகளைத் தவிர மற்ற நேரம் உள்விளையாட்டு அரங்கத்தில்தான் பயிற்சி மேற்கொண்டேன் என்றும் சஹா கூறியுள்ளார்.

    இதுகுறித்து சஹா கூறுகையில் ‘‘கொல்கத்தாவில் மழை பெய்ததால் என்னுடைய பயிற்சி தொடர்ந்து தடைபட்டது. உள்விளையாட்டு அரங்கில்தான் வலைப்பயிற்சி செய்தேன். ஒன்றிரண்டு கிளப் போட்டிகளில் மட்டுமே விளையாடினேன்.

    ஆகவே, நான் தற்போது இரண்டு மடங்கு கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு நீண்ட தொடர்களில் விளையாட இருப்பதால் இந்த கடின உழைப்பு.

    இலங்கையின் சமீப கால விளையாட்டை வைத்து அவர்களை எளிதாக நினைத்துவிடக் கூடாது. இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவார்கள்.

    விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது என்னிடம் பேசினார். என்னுடைய பயிற்சி குறித்து தெரிந்து கொள்ள விரும்பினார். அணியின் பீல்டிங்கை மாற்றம் செய்யக்கூடிய அளவிற்கு எனக்கு சுதந்திரம் தந்துள்ளார். அதனால் முக்கியமான நபராக மாறியுள்ளதை நான் அறிவேன். டிஆர்எஸ் முடிவின்போது விராட் கோலி, என்னுடனும் பந்து வீச்சாளர்களுடனும் தான் ஆலோசனை நடத்துவார். அதனால் எனது பணி முக்கியமானது’’ என்றார்.
    Next Story
    ×