search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுட்டினோவிற்கு ரூ.598 கோடி கொடுக்க தயாரான பார்சிலோனா: மறுத்தது லிவர்பூல்
    X

    கவுட்டினோவிற்கு ரூ.598 கோடி கொடுக்க தயாரான பார்சிலோனா: மறுத்தது லிவர்பூல்

    பிரேசில் வீரர் பிலிப் கவுட்டினோவிற்கு 598 கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருந்தபோதிலும், லிவர்பூல் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டது.
    கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் வீரர்களை டிரான்ஸ்பர் செய்யும் நடைமுறை உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை அடுத்த கிளப்புகளில் இருந்து வாங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் லிவர்பூல் அணியில் இடம்பிடித்துள்ள பிரேசில் வீரர் பிலிப் கவுட்டினோவை வாங்குவதற்கு ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா விரும்பியது. அவருக்காக டிரான்ஸ்பர் தொகையாக 598 கோடி ரூபாய் கொடுக்க பார்சிலோனா முன் வந்தது.

    ஆனால், லிவர்பூல் அணி அந்த வீரரை கொடுக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து லிவர்பூல் பயிற்சியாளர் கூறுகையில் ‘‘நாங்கள் ஒன்றிணைந்து அடுத்த நிலைக்கு செல்ல விரும்புகிறோம். இதற்கு நாங்கள் ஒன்றாக இருப்பது அவசியம். நாங்கள் அவரை விற்பனை செய்யவில்லை’’ என்றார்.
    Next Story
    ×