search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது, இந்தியா
    X

    பயிற்சி ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது, இந்தியா

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது.
    கொழும்பு:

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்திய அணி, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் கொழும்பில் இன்று தொடங்குகிறது.

    இலங்கை தொடருக்காக பிரத்யேக பயிற்சி முகாம் எதுவும் நடத்தப்படாத நிலையில் இந்த பயிற்சி ஆட்டம் இந்தியாவுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் மாற்றி மாற்றி பரிசோதித்து கொள்ள முடியும். தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்து குணமடைந்து அணிக்கு திரும்பியிருக்கும் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுக்கு உடல்தகுதியை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இது அமையும்.

    இதே போல் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத ரோகித் சர்மா, பயிற்சி ஆட்டத்தில் ரன்களை குவித்து அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார். இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை. அதனால் 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற ரீதியில் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு அணியை தேர்வு செய்யும். அதற்கு யார் பொருத்தமான வீரர்களாக இருப்பார்கள் என்பதை கண்டறிய இந்த பயிற்சி ஆட்டம் விராட்கோலி-ரவிசாஸ்திரி கூட்டணிக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம். 
    Next Story
    ×