search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் பார்த்த சிறந்த ஆட்டம் இது தான்: ஹர்மன்பிரீத் கவுருக்கு ஷேவாக் புகழாரம்
    X

    நான் பார்த்த சிறந்த ஆட்டம் இது தான்: ஹர்மன்பிரீத் கவுருக்கு ஷேவாக் புகழாரம்

    ‘நான் பார்த்த உலக கோப்பையிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது தான்’ என ஹர்மன்பிரீத் கவுருக்கு இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ரன்கள் குவித்து அசத்திய இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுருக்கு வாழ்த்துகள் குவித்து வருகின்றன. இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கில்கிறிஸ்ட், சச்சின், பாண்டிங், டோனி தயவு செய்து உட்காருங்கள். நான் பார்த்த உலக கோப்பையிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது தான். ஹர்மன்பிரீத் கவுருக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். ‘நம்ப முடியாத பேட்டிங்’ என்று சச்சின் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதே போல் ரோகித் சர்மா, ரவிசாஸ்திரி, கும்பிளே, ஹர்பஜன்சிங், புஜாரா, வி.வி.எஸ்.லட்சுமண் உள்ளிட்டோரும் ஹர்மன்பிரீத் கவுருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். 
    Next Story
    ×