search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களிடம் நட்பு பாராட்டாத ஆஸி. பயிற்சியாளர்தான் தேவை என்கிறார் கிப்ஸ்
    X

    வீரர்களிடம் நட்பு பாராட்டாத ஆஸி. பயிற்சியாளர்தான் தேவை என்கிறார் கிப்ஸ்

    வீரர்களின் நட்பு அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளாத ஆஸ்திரேலிய பயிற்சியாளர்தான் தென்ஆப்பிரிக்கா அணிக்கு தேவை என கிப்ஸ் கூறியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஹெர்ஸ்செல் கிப்ஸ். ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடித்து சாதனைப் படைத்தவர். அதுபோல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 434 ரன்களை சேஸிங் செய்ய முக்கிய காரணமாக இருந்தவர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சமீபத்தில் மோசமாக தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையும் தலைமை பயிற்சியாளரான ரஸல் டொமிங்கோவின் பயிற்சி நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய பயிற்சியாளரை நியமிக்கும் என தெரிகிறது.

    இந்நிலையில் நட்பு அணுகுமுறையை சகித்துக்கொள்ளாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்தான், பயிற்சியாளர் பதவிக்கு சரியான நபராக இருப்பார் என கிப்ஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கிப்ஸ் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் முட்டாள்தனத்தோடு செயல்படமாட்டார்கள். புதிய அணுகு முறையை நான் விரும்புகிறேன். சில புதிய விஷயங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அவர்களால்தான் சாதிக்க முடியும்.

    அணி பயிற்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அணியை வைத்துக் கொள்வது தேவையானது. தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள சில வீரர்கள், பயிற்சியாளருடன் மிகவும் நெருங்கிய நட்பு வைத்துள்ளனர். இது முட்டாள்தனமானது. நண்பன் - நண்பன் அணுகுமுறையை சகித்துக்கொள்ளாத ஆஸ்திரேலிய பயிற்சியாளர் தென் ஆப்பிரிக்க அணிக்கு பணியாற்ற முடியும் என்பதே எனது நம்பிக்கை” என்றார்.
    Next Story
    ×