search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முனிச் விபத்திற்குப் பிறகு மான்செஸ்டர் அணியுடன் சி.எஸ்.கே. அணியை ஒப்பிட்ட அஸ்வின்
    X

    முனிச் விபத்திற்குப் பிறகு மான்செஸ்டர் அணியுடன் சி.எஸ்.கே. அணியை ஒப்பிட்ட அஸ்வின்

    முனிச் விமான விபத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து சிறப்பாக விளையாடிய மான்செஸ்டர் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒப்பிட்டுள்ளார் அஸ்வின்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜொலித்ததன் காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தற்போது உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

    டோனி, அஸ்வின், ஜடேஜா, மோகித் சர்மா போன்ற இந்திய அணி வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தனர். இதனால் ஐ.பி.எல். அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குதான் அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது.

    புகழோடு விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மேட்ச் பிக்சிங் வழக்கில் சிக்கியதால், அந்த அணி 2016 மற்றும் 2017 ஐ.பி.எல். சீசனில் பங்கேற்காத வகையில் தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த வருடம் நடைபெறும் தொடரில் பங்கேற்கும்.

    இரண்டு ஆண்டுகள் தடையை சந்தித்த பின் மீண்டும் களத்திற்கு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அஸ்வின் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஒப்பிட்டுள்ளார்.

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் தலைசிறந்த அணியாக திகழ்வது மான்செஸ்ட் யுனைடெட் கால்பந்து அணி. இந்த அணி ஐரோப்பியன் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக செர்பியா சென்றிருந்தது. 1958-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி பிரிட்டீஸ் யூரோப்பியன் ஏர்வேஸ் மூலம் சொந்த நாடு திரும்பும்போது விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 7 வீரர்கள் மரணம் மடைந்தனர்.

    பின்னர் கடும் போராட்டத்திற்குப்பின் 10 வருடங்கள் கழித்து யூரோப்பியன் கோப்பையை வென்று, சாதனைப் படைத்த முதல் இங்கிலாந்து கிளப் என்ற சாதனையைப் படைத்தது. இந்த கோப்பையை வென்ற அணியில், விமான விபத்தில் உயிர்பிழைத்த பாபி சார்ல்டன் மற்றும் பில் பால்கஸ் ஆகியோர் இடமபிடித்திருந்தனர்.

    இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடையில் இருந்து மீண்டும் சிறப்பாக செயல்படும் என்று ஒப்பிட்டு கூறியுள்ளார்.

    மேலும், இதில் மாற்றுக் கருத்து உள்ள ரசிகர்கள் என்னை டுவிட்டர் மூலம் விமர்சனம் செய்ய விரும்புவீர்கள். அவர்கள் தற்போது டுவிட்டரில் பதில்போட வேண்டாம். மீண்டும் ஏதாவது தவறாக பதிவிடும்போது டுவிட் செய்யுங்கள்’’ என்ற கூறியுள்ளார்.
    Next Story
    ×