search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு தான்: மிட்செல் ஜான்சன் சொல்கிறார்
    X

    ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு தான்: மிட்செல் ஜான்சன் சொல்கிறார்

    இங்கிலாந்து அணியில் உள்ள குறைபாடு காரணமாக ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்புள்ளது என்று ஜான்சன் கூறியுள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய தொடராக கருதப்படுவது ஆஷஸ். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தும். இந்த வருடத்தின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்த தொடர் நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா அணிதான் வெற்றிபெறும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

    ஆஷஸ் தொடர் குறித்து மிட்செல் ஜான்சன் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடரில் பங்கேற்பதாக ஆஸ்திரேலியா வரும் இங்கிலாந்து அணி சில பிரச்சினைகளை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் சீரான அணியை பெற்றிருக்கவில்லை. அவர்கள் அணியை சற்று மாற்றியுள்ளனர். 11 பேர் கொண்ட சரியான அணியை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

    ஆஷஸ் தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சமயத்தில் அணியை மாற்ற முயற்சி செய்தால் அது கடினமானதாகிவிடும். ஏனென்றால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

    3-வது இடத்தில் ஒரு வீரர் களம் இறக்கப்படும்போது, அவர் அந்த அணியின் தலைசிறந்த வீரராக திகழ்வார் என்பதுதான் பொருள். ஆனால் இங்கிலாந்தில் அணியில் 3-வது வீரராக களம் இறங்கும் பேலன்ஸ் சிறந்த வீரர் என்று நான் நினைக்கவில்லை.

    ஒரு பவுலராக இருந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன் கேரி பேலன்ஸை 3-வது வீரராக களமிறங்குவதை பார்த்தால் அதிக நம்பிக்கை பெறுவீர்கள். ஆஸ்திரேலிய அணிக்கும் அதிக நம்பிக்கை இருக்கும்.

    ஜோ ரூட், அலஸ்டைர் குக் போன்ற சில சிறந்த பேட்ஸ்மேன்களையும் பெற்றுள்ளார்கள். இதனால் தொடர் சிறப்பானதாக இருக்கும். அதுபோல் சில குறைபாடுகளும் உள்ளன’’ என்றார்.
    Next Story
    ×