search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சென்றடைந்தது: இந்தியா மோதும் பயிற்சி ஆட்டம் நாளை தொடக்கம்
    X

    இலங்கை சென்றடைந்தது: இந்தியா மோதும் பயிற்சி ஆட்டம் நாளை தொடக்கம்

    இலங்கை அணி உடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.
    கொழும்பு:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்று மாலை இலங்கை சென்றடைந்தது.

    இந்தியா- இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 16-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

    ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை நடக்கிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டி செப்டம்பர் 6-ந்தேதி நடைபெறுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.

    இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 டெஸ்ட் கொண்ட இந்த தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இதனால் இந்த முறையும் இந்திய அணி இலங்கை மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×