search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலிசுடன் ஒப்பிட்டு பிலாண்டருக்கு பாராட்டு
    X

    காலிசுடன் ஒப்பிட்டு பிலாண்டருக்கு பாராட்டு

    பிலாண்டர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும் போது, தென்ஆப்பிரிக்க அணிக்கு புதிய காலிஸ் உருவெடுப்பது போல் தெரிகிறது என தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியுள்ளார்.
    நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் வெரோன் பிலாண்டர் (54, 42 ரன் மற்றும் 5 விக்கெட்) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், ‘பிலாண்டர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும் போது, தென்ஆப்பிரிக்க அணிக்கு புதிய காலிஸ் உருவெடுப்பது போல் தெரிகிறது, அவரது ஆட்ட நுணுக்கம் காலிஸ் போன்றே அப்படியே இருக்கிறது’ என்றார்.
    Next Story
    ×