search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புது வகையான சிகை அலங்காரத்துடன் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
    X

    புது வகையான சிகை அலங்காரத்துடன் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா

    இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா புது வகையான சிகை அலங்காரத்துடன் தோற்றம் அளிக்கிறார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அணியில் உள்ள மிகவும் ஸ்டைலான வீரர்களில் இவரும் ஒருவர். குஜராத்தை சேர்ந்த ஹர்திக் பாண்டியா, தற்போது இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளிலும் இடம்பிடித்திருந்தது ஹர்திக் பாண்டியா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இடம்பிடித்திருந்தார். டி20 போட்டியில் மட்டும் இடம்பெறவில்லை.



    இவர் எப்போதும் தன்னை ஒரு ஸ்டைலிஸ் வீரராக காட்டிக்கொள்வதற்கக, விதவிதமாக கெட்டப்பை மாற்றுவார். குறிப்பாக அவ்வப்போது தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வார்.

    தற்போது இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்டியா தயாராகிக் கொண்டிருக்கிறார். பிரபலமானவர்களுக்கு முடி அலங்காரம் செய்யும் ஹகிம் ஆலிமிடம் சென்று புது சிகை அலங்காரம் வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

    அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, ‘‘ஆலிம் ஹகிம் நீங்கள் உண்மையிலேயே வித்தைக்காரர் என்று நான் சொல்வேன்... நான் அதை விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×