search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுக்கு அடித்தது யோகம்: இந்தியா ‘ஏ’, தெ.ஆ. ‘ஏ’ உடன் முத்தரப்பு தொடரில் பங்கேற்பு
    X

    ஆப்கானிஸ்தானுக்கு அடித்தது யோகம்: இந்தியா ‘ஏ’, தெ.ஆ. ‘ஏ’ உடன் முத்தரப்பு தொடரில் பங்கேற்பு

    இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் இருந்து ஆஸி. விலகியதால், ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது.
    தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்பு தொடர் இந்த மாதம் 26-ந்தேதி தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடங்குவதாக இருந்தது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையே சம்பள பிரச்சினை நிலவி வருகிறது. வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்பது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இந்த தொடரில் பங்கேற்காது என்பதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு, இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘எங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

    கிரிக்கெட்டில் சமீப ஆண்டாக சிறந்து விளங்கியதன் காரணமாக, கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ஐ.சி.சி.யால் முழு உறுப்பினராகி, டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ளது. அதற்கான தகுதி அந்த அணியிடம் உள்ளது.

    கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி, முத்தரப்பு தொடரில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக கடும் போட்டியாக திகழும்’’ என்று கூறியுள்ளது.

    முத்தரப்பு போட்டி நிலவரம்:-

    ஜூலை 28: தென்ஆப்பிரிக்கா - இந்தியா

    ஜூலை 30: தென்ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்

    ஆகஸ்ட் 1: இந்தியா - ஆப்கானிஸ்தான்

    ஆகஸ்ட் 3: தென்ஆப்பிரிக்கா - இந்தியா

    ஆகஸ்ட்: தென்ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான்

    ஆகஸ்ட் 8: இறுதிப் போட்டி
    Next Story
    ×