search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா- ஆஸி., இங்கிலாந்து- தெ.ஆ. பலப்பரீட்சை
    X

    பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா- ஆஸி., இங்கிலாந்து- தெ.ஆ. பலப்பரீட்சை

    பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
    இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானை இலங்கையும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்தும், தென்ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தின.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவுற்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து 7 போட்டிகளில் 6 வெற்றி, 1 தோல்வியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 வெற்றி, 1 தோல்வியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியா 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா நான்கு வெற்றி, 2 தோல்விகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.



    ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடர் விதிப்படி முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடனும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணி, 3-வது இடத்தை பிடிக்கும் அணியுடனும் மோத வேண்டும்.



    அதன்படி 2-வது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவும், 3-வது இடம் பிடித்துள்ள இந்தியாவும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. முதல் அரையிறுதியில் முதல் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தும், 4-வது இடத்தை பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.



    முதல் அரையிறுதிப் போட்டி வருகிற 18-ந்தேதியும், 2-வது அரையிறுதி 20-ந்தேதியும், இறுதிப் போட்டி 23-ந்தேதியும் நடக்கிறது. 20-ந்தேதி நடக்கும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திவிட்டால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
    Next Story
    ×