search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகன்னா
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகன்னா

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் ஹெலப்பை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி ஜோகன்னா அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா)- 6-வது வரிசையில் உள்ள ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து) மோதினார்கள்.

    இதில் ஹெலப் அதிர்ச்சிகரமாக தோற்றார். கோன்டா 6-7 (2-7), 7-6 (7-5), 6-4 என்ற கணக்கில் ஹெலப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக விம்பிள்டனில் சிறந்த நிலையை அடைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில் மக்டலீனா ரைபரிகோவா (சுலோவாக்கியா) 6-3, 6-3 என்ற கணக்கில் 24-வது வரிசையில் இருக்கும் கோகோ வான்ட் வெஜை (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.



    10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் கால்இறுதியில் ஜெலீனாவை எளிதில் வென்றார். அவர் தனது 37-வது வயதில் 10-வது முறையாக விம்பிள்டன் அரை இறுதியில் நுழைந்தார்.

    ஒரு அரைஇறுதியில் ஜோகன்னா கோன்டா- வீனஸ் வில்லியம்சும், மற்றொரு அரை இறுதியில் முகுருஜா- ரைபரி கோவாவும் மோதுகிறார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி இன்று நடக்கிறது. இதில் மோதும் வீரர்கள் விவரம்:-

    1. ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- சாம்குயரி (அமெரிக்கா).

    2. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- ரோனிக் (கனடா).

    3. முல்லர் (லக்சம்பர்க்)- சிலிச் (குரோஷியா).

    4. ஜோகோவிச் (செர்பியா)- தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு).
    Next Story
    ×