search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    லண்டன் :

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    பெண்கள் இரட்டையர் 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் இணை தோல்வி அடைந்தது. இவர்களை 6-2, 6-4 என்ற நேர் செட்டில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜன் சான் (சீனத்தைபே) ஜோடி வெளியேற்றியது.
    Next Story
    ×