search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ லீக்கில் இருந்து இந்தியா விலகல்: உலக ஹாக்கி பெடரேசன் வருத்தம்
    X

    புரோ லீக்கில் இருந்து இந்தியா விலகல்: உலக ஹாக்கி பெடரேசன் வருத்தம்

    புரோ லீக் தொடரில் இருந்து ஹாக்கி இந்தியா விலகுவதாக அறிவித்துள்ளது. இதற்கு உலக ஹாக்கி பெடரேசன் வருத்தம் தெரிவித்துள்ளது.
    சர்வதேச ஹாக்கி பெடரேசன் புரோ லீக் என்ற உலகளாவிய ஹாக்கி தொடரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த லீக் தொடரில் விளையாடுவதற்கு உலகத் தரவரசையில் முதல் 9 இடங்களை பிடிக்கும் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அணிகள் இடம்பெறும்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் சொந்த மண்ணில் ஒரு முறையும், எதிரணிகளின் சொந்த மண்ணில் ஒருமுறையும் மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறும். இதுதான் சர்வதேச ஹாக்கி பெடரேசனின் எண்ணம்.

    இந்த தொடர் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு வருடம் வாரத்தின் கடைசி நாட்களில் நடக்கும்.



    இந்த புரோ லீக் தொடரில் இருந்து இந்தியா விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச ஹாக்கி பெடரேசன் கூறுகையில் ‘‘இந்தியா கலந்து கொள்ளாது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவலை ஹாக்கி இந்தியாவிடம் இருந்து பெற்றுள்ளோம். உலகளாவிய புதிய லீக் தொடரில் பங்கேற்க இயலாது என்று ஹாக்கி இந்தியா எடுத்த முடிவு வருத்தம் அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளது.

    இந்திய பெண்கள் அணி தர வரிசையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. இதனால் ஹாக்கி இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் விலகுவதற்கான எந்த காரணத்தையும் ஹாக்கி இந்தியா தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×