search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச் - இரட்டையரில் சானியா ஜோடி வெற்றி
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச் - இரட்டையரில் சானியா ஜோடி வெற்றி

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஏஞ்சலிக் கெர்பர், ராட்வன்ஸ்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஏஞ்சலிக் கெர்பர், ராட்வன்ஸ்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 3-6, 7-6(5), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்சின் சோங்காவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் குல்பிசை (லாத்வியா) வீழ்த்தி 4-வது சுற்றை உறுதி செய்தார்.

    மிலோஸ் ராவ்னிக் (கனடா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரின் வீறுநடையும் தொடருகிறது.

    பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4-6, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் போராடி ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) தோற்கடித்தார். இதில் ஒரு கட்டத்தில் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் 2-4 என்று பின்தங்கி தோல்வியின் விளிம்பில் தவித்த கெர்பர் அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று வெற்றிக்கனியை பறித்தார்.

    இதே போல் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பாக்சின்ஸ்கியையும் (சுவிட்சர்லாந்து), ஸ்பெயினின் கார்பின் முகுருஜா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் சோரனா கிர்ஸ்டியாவையும் சாய்த்து 4-வது சுற்றை எட்டினர். வோஸ்னியாக்கி (டென்மார்க்), குஸ்னெட்சோவா (ரஷியா), கோகோ வன்டேவெஜ் (அமெரிக்கா), ரைபரிகோவா (சுலோவக்கியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ் கூட்டணி 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் நவோமி பிராடி-ஹீதர் வாட்சன் இணையை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. 
    Next Story
    ×