என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் லண்டனில் இன்று தொடக்கம்
Byமாலை மலர்6 July 2017 12:54 AM GMT (Updated: 6 July 2017 12:54 AM GMT)
இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
லண்டன்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் அவர் தாயகம் திரும்பினார். மனைவியை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருப்பதால் அவர் இந்த டெஸ்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டீன் எல்கர் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டயர் குக் அந்த பொறுப்பில் விலகியதை தொடர்ந்து புதிய கேப்டனாக பொறுப்பு ஏற்று இருக்கும் ஜோரூட் தலைமையில் இங்கிலாந்து அணி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் ஆடும் லெவனில் லியாம் டாவ்சன், மொயீன் அலி ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என்று கேப்டன் ஜோரூட் அறிவித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காணுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரை 145 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 58 போட்டியிலும், தென் ஆப்பிரிக்க அணி 32 போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 55 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story
×