search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்
    X

    இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில், முன்னாள் கேப்டனும் ஜூனியர் அணியின் தேர்வுக்குழு தலைவருமான வெங்கடேஷ் பிரசாத் இணைய உள்ளார்.
    மும்பை:

    இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், டோட்டா கணேஷ், ரிச்சர்டு பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவரை விண்ணப்பிக்கச் செய்ய சச்சின் முயற்சித்து உள்ளார். தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரரும், ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக்கலாம் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஆனால், கிர்ஸ்டன் அதை விரும்பவில்லை. இந்திய அணியுடன் இருப்பதை நான் எப்போதுமே விரும்புவதாக கூறிய அவர், தனிப்பட்ட விஷயம் காரணமாக பதவியை ஏற்க மறுத்தார்.


    இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் போட்டியில் முன்னாள் கேப்டன் வெங்கடேஷ் பிரசாத்தும் (வயது 47) இணைந்துள்ளார். தற்போது இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் பிரசாத்தின் மூன்றாண்டு பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதனால், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை பிரசாத் உறுதி செய்யவில்லை. ஆனால், அவர் போட்டியிட விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வெங்கடேஷ் பிரசாத் 33 டெஸ்ட் போட்டிகளிலும், 162 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×