search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து
    X

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடக்க இருந்த தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
    டெர்பி:

    பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று டெர்பியில் நடக்க இருந்த 6-வது லீக்கில் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பாகவே மழை புகுந்து விளையாடியது. இடைவிடாது மழை பெய்ததால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்க கேப்டன் டேன் வான் நீகெர்க் கூறும் போது, ‘மழையால் போட்டி ரத்தாவது ஏமாற்றத்திற்குரியது தான். ஆனால் இதுவும் விளையாட்டில் ஒரு பகுதி. ஓய்வறையிலேயே உட்கார்ந்து கொண்டு இருந்ததால் சலிப்பு ஏற்பட்டது. அதனால் உள்விளையாட்டு அரங்கில் ஜாலியாக பயிற்சி மேற்கொண்டோம். அடுத்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்றார்.

               ஆட்டம் ரத்தானதால் ஏமாற்றத்தில் தென்ஆப்பிரிக்க பெண்கள் அணியின்   கேப்டன் டேன் வான் நீகெர்க்.

    முன்னதாக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் லீசெஸ்டரில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, கேப்டன் ஹீதர் நைட் (106 ரன்), நடாலி ஸ்வெர் (137 ரன்) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது. உலக கோப்பையில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் 29.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர இயலாமல் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி 29.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 215 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். எனவே இங்கிலாந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்துக்கு இது முதலாவது வெற்றியாகும். பாகிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.
    Next Story
    ×