search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு புதுமுகங்கள்
    X

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு புதுமுகங்கள்

    இந்தியாவிற்கு எதிராக மீதமுள்ள மூன்று ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் கொண்ட அணியில் சுனில் அம்ப்ரிஸ், கைல் ஹோப் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கைல் ஹோப்  வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் ஹோப்பின் சகோதரர் ஆவார். இவர் இலங்கை ‘ஏ’ அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் டிரினிடாட் அண்டு டொபாகோ ரெட் போர்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.



    சுனில் மண்டல சூப்பர்50 ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதேபோல் பிசிஎல் முதல்தர போட்டிகளில் நன்றாக விளையாடி உள்ளார்.

    இதனால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜோனாதன் கார்ட்டர், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×