search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியில் தெலுங்கானா மாநில வீராங்கனை
    X

    அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியில் தெலுங்கானா மாநில வீராங்கனை

    அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன தெலுங்கானாவைச் சேர்ந்த சிந்துஜா என்ற வீராங்கனை இடம்பிடித்துள்ளார்.
    ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்தில் உலக டி20 குவாலிபையர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான அமெரிக்க பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த சிந்துஜா இடம்பிடித்துள்ளார். இவர் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங் செய்யும் திறமையும் படைத்தவர்.

    சிந்துஜா தெலுங்கானா நல்கொண்டா மாவட்டத்தின் அமங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஐதராபாத் அணியில் இடம்பிடித்திருந்தார். பி.டெக்., எம்.பி., படித்துள்ள இவர், திருமணத்திற்குப் பிறகு அமெரிக்க சென்றார். தற்போது 26 வயதாகும் சிந்துஜா அமெரிக்க பெண்கள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    Next Story
    ×