search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி வில்லியர்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்: ஸ்மித் சொல்கிறார்
    X

    டி வில்லியர்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்: ஸ்மித் சொல்கிறார்

    தென்ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனான டி வில்லியர்ஸ் தனது கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஸ்மித் கூறியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அத்துடன் இந்த தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவருடைய பேட்டிங் எடுபடவில்லை. தொடரை 1-2 என இழந்தது.

    இதானல் டி வில்லியர்ஸ் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், தொடக்க வீரரும் ஆன ஸ்மித் வலியுறுத்தியுள்ளார்.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் கூறுகையில் ‘‘ஆகஸ்ட் மாதம் தன்னுடைய எதிர்காலம் குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் ஏபி டி வில்லியர்ஸ் பேச இருக்கிறார். என்னுடைய அறிவுரை என்னவென்றால், அடுத்த இரண்டு வருடம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் கேப்டன் பதவியில் இருந்து விலகி பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×